இராக் குண்டு வெடிப்பில் 2 தமிழக தொழிலாளிகள் பலி
சென்னை: இராக்கில் தனியார் நிறுவனத்தின் மூலம் அமெரிக்க ராணுவ முகாமில் பணியாற்றிய 2 தமிழக வாலிபர்கள் குண்டுவெடிப்பில் பலியானார்கள்.
சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்தவர் செந்தில். நாகை மாவட்டம் கீழஈசனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இருவரும் இராக்கில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தனர். அங்குள்ள அமெரிக்க ராணுவ முகாம்களுக்குத் தேவையான தளவாடங்களை இந்த நிறுவனங்கள் சப்ளை செய்து வந்துள்ளன.
செந்திலும், ரமேஷ்குமாரும் அமெரிக்க ராணுவத்துக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களை ஓட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதிய உணவுக்காக ராணுவ முகாமுக்கு இருவரும் நிறுவனத்தின் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென்று அந்த காரை குண்டு வீசி தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே செந்திலும், ரமேஷ்குமாரும் பலியாயினர்.
அவர்களுடன் வேலைபார்த்தவர்கள் மூலம் இந்த தகவலை தமிழகத்தில் உள்ள அவர்களது பெற்றோர் தெரிந்து கதறி அழுதனர்.
இதில் ரமேஷ்குமாரின் தந்தை சாமியப்பன் தனது மகனின் உடலை தமிழகத்துக்குக் கொண்டு வர உதவுமாறு தமிழக அரசிடம் கோரிக்கை அளித்துள்ளார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications