போதையில் கொடூரம்-தந்தையை கொன்ற மகள்கள்
திசையன்விளை: தினமும் குடித்துவிட்டு வந்து தங்களை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை மகள்களே உலக்கையால் அடித்தும் அரிவாள்களால் வெட்டியும் கொலை செய்தனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ரம்மதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோணி லியாகப்பன். கூலி வேலை செய்து வந்த இவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவியும், சகாய கனகா, சகாய சங்கீதா ஆகிய மகள்கள் உள்ளனர்.
இவர்கள் பீடி சுற்றும் வேலைகள் செய்து வந்தனர். அந்தோணி லியாகப்பன் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியையும், மகள்களையும் அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அந்தோணி லியாகப்பன் வழக்கம் போல் குடித்து விட்டு வந்து மகள்களை அடித்து துன்புறுத்தினார்.
இதில் ஆத்திரமடைந்த அவரது மகள்கள், தந்தையை உலக்கையால் அடித்தும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தனர். இதுகுறித்து அந்தோணியம்மாள் திசையன்விளை போலீசில் புகார் செய்தார்.
எஸ்ஐ ஜீன்குமார் வழக்கு பதிவு செய்து சகாய கனகா, சகாய சங்கீதா இருவரையும் கைது செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications