சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சிவகாசி அருகே உள்ளது விஜய ரங்கநாதபுரத்தில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இதிவ் வெங்கடராமானுஜம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டசு தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன.
இந் நிலையில் ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த தொழிலார்கள் வெளியே ஒடி விட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பாட்டாசு, மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்தன.












Click it and Unblock the Notifications