தீயில் எரிந்த எஸ்எஸ்எல்சி விடை தாள்கள்-பரிகாரம் என்ன?
சென்னை: வேலூரில் எரிந்து போன எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் 2ம் தாள் விடைத் தாள்கள் தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பது குறித்து தேர்வு முடிவுகள் வெளியாகும் தினத்தில் தெரிவிக்கப்படும் என தேர்வுத்துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறினார்.
அவர் கூறியதாவது:
வேலூரில் எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் மையத்தில் 12,804 ஆங்கிலம் 2ம் விடைத் தாள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 9,600 விடைத் தாள்கள் லேசாக சுற்றி வர கருகின. ஆனாலும் அவரை திருத்தும் நிலையில் இருந்தன. இதனால் அவை திருத்தப்பட்டு விட்டன.
மேலும் 2,342 விடைத் தாள்களில் எழுத்துக்கள் நன்றாக தெரிந்தன. எனவே அவையும் திருத்தப்பட்டு விட்டன.
தீயை அணைக்க தண்ணீர் பீய்ச்சியபோது 862 விடைத் தாள்கள் பாதிக்கப்பட்டன. அவற்றிலும் கூட 300 தாள்கள் திருத்தும் நிலையில் தான் உள்ளன.
மற்ற விடைத் தாள்கள் தான் எழுத்துக்களே தெரியாத அளவுக்கு அழிந்துள்ளன. இவற்றிற்கு விரைவில் பரிகாரம் தேடப்படும்.
இதற்கு என்ன பரிகாரம் என்பது பற்றி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்று தெரிவிக்கப்படும்.
மே 31க்குள் எஸ்எஸ்எல்சி முடிவுகள்:
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் மே 31ம் தேதிக்குள்ளோ அல்லது அதற்கு முன்னதாகவே வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications