புலிகளுக்கு வெடிப்பொருட்கள் கடத்திய 4 பேர் கைது
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து விடுதலைப்புலிகளுக்கு வெடி பொருட்கள், ஜவுளிகளை கடத்த முயன்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம் பாம்பன், தங்கச்சி மடம், தனுஷ்கோடி கடலோரப்பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள், மருந்து பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது.
இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தமிழக போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி கடத்தல்காரர்கள் தங்கள் கைவரிசையை தொடர்ந்து காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் போலீஸார் ரோந்து சென்றனர். அப்போது சூசையப்பர்பட்டினம் பகுதியில் ஒரு நாட்டுப்படகில் 4 பேர் பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்தனர்.
சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களை சோதனையிட்டதில் படகிலிருந்த ஒரு மூட்டையில் 50 கிலோ எடையுள்ள அலுமினிய பவுடர் (வெடி பொருள் தயாரிக்க), இன்னொரு மூடையில் 25 புதிய கைலிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களது படகு பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் தங்கச்சி மடத்தை சேர்ந்த படகு உரிமையாளர் சந்தியா (வயது 40), மீனவர்கள் கிறிஸ்துராஜா (34), ஜான் (33), ரோமன்ஸ் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. விடுதலைப்புலிகளுக்கு இந்த பொருட்களை கடத்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
மற்றொவர் கைது
இதே போல் நேற்று முன்தினம் பாம்பன் கடல் பகுதியில் 34 டின்களில் வெடிமருந்துகளும் மற்றும் அலுமினிய சல்பேட், பேட்டரிகள், ஜவுளிகள், கடத்த முயன்ற நாகராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications