பொதுத்துறை பங்கு விற்பனை: மே 23ல் இடதுசாரிகள் ஆலோசனை
டெல்லி: லாபத்தில் இயங்கிவரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பங்குகளை விற்கும் மத்திய அரசு முடிவினால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அரசுக்கு அளித்து வரும் ஆதரவு குறித்து பரிசீலிக்க இடதுசாரி கட்சித் தலைவர்களுடன் வரும் 23ம் தேதி ஆலோசனை நடத்தவும் அக்கட்சி முடிவெடுத்துள்ளது.
டெல்லியில் கடந்த இரண்டுநாள்களாக நடந்துவந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 31 வது தேசிய மாநாடு இன்று நிறைவடைந்தது. இதையடுத்து சிபிஐ பொதுச்செயலர் ஏ.பி.பரதன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு விற்க முனைந்திருப்பது மிகவும் அபாயகரமான முடிவாகும்.
மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்துக்கு இது எதிரான செயலாகும். பொதுத்துறை பங்குகளை விற்கமாட்டோம் என்றும் அந்த நிறுவனத்தில் அரசுக்குள்ள பிடியை இன்னும் வலுப்படுத்தப்போவதாக தெளிவாக அளித்த வாக்குறுதிக்கு மாறான நடவடிக்கை இது.
ராஷ்ட்ரிய இஸ்பட் நிகாம் லிமிடெட், நியூக்ளியர் பவர் கார்பொரேஷன், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்பொரேஷன், கோல் இந்தியா லிமிடெட், யுரேனியம் கார்பொரேஷன் மற்றும் கோவா, கொச்சின் கப்பல்கட்டுமான நிறுவனங்கள் போன்ற பெருமைமிக்க, லாபத்தை ஈட்டிவரும் 24 பொதுத்துறை நிறுவனங்களின் 5 முதல் 10 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்த பங்குகள் அரசாங்கத்துக்கு மிகவும் இன்றியமையாத, முக்கிய ஆதாரமானவை என்பதால் மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக இந்த விற்பனை நடவடிக்கையை அரசு கைவிடவேண்டும். இது தொடர்பாக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை முழு மூச்சுடன் எதிர்ப்போம்.
பொதுத்துறை நிறுவனங்களில் அரசாங்கத்தின் பங்குகளை குறைத்தால் நன்மை ஏற்படுவதாக நிதியமைச்சர் சிதம்பரம் கூறும் காரணங்களை ஏற்கமுடியாது. இந்த பங்குகளை விற்றால் அரசாங்கத்துக்கு தீங்காகத்தான் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
23ல் ஆலோசனை
அப்போது உடன் இருந்த கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், மத்திய அரசுக்கு இடது சாரிகள் அளித்துவரும் நிபந்தனையற்ற ஆதரவு எப்போதுமே நிலைத்திருக்கும் என்று அவர்கள் (மத்திய அரசு) கருதுகின்றனர் போலிருக்கிறது.
விலைவாசியைக் கட்டுப்படுத்துவதற்கு இடதுசாரிக் கட்சிகள் அளித்த பரிந்துரைகள் மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்தக்கோரி நாடுமுழுவதும் 1 கோடி பேரிடம் நடத்திய கையெழுத்து வேட்டை மனுவை லோக்சபா சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜியிடம் அளிக்கவுள்ளோம்.
இந்த நிலையில், இதுபோன்று நிபந்தனையற்ற ஆதரவை மத்திய அரசுக்கு அளித்திருப்பதில் அர்த்தமிருக்கிறதா என்பது குறித்து மற்ற இடதுசாரி முக்கியக் கட்சித் தலைவர்களுடன் வரும் 23ம் தேதி ஆலோசனை நடத்தப்படும்.
அதன்பிறகு முக்கிய முடிவெடுக்கப்படும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications