ஜூன் 3 முதல் மருத்துவகல்வி விண்ணப்பம்- ஜூலை 1ல் பட்டியல்

விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஜூன் 17ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். பழைய பிளஸ்டூ மாணவர்களும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
ஜூலை 8ல் கவுன்சலிங்:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜூலை 1ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. முதல் கட்ட கவுன்சில் ஜூலை 8ம் தேதி தொடங்கி ஜூலை 16ம் தேதி முடிவடைகிறது.
வழக்கம்போல் இந்தாண்டும சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் கவுன்சலிங் நடைபெறும்.
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சை உள்பட 14 அரசு மருத்துவக்கல்லூரிகளில் மொத்தம் 1,398 இடங்கள் உள்ளன. இதுதவிர 247 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன.
சென்னை செட்டிநாடு, கோவை பிஎஸ்ஜி, பெருந்துறை உள்ளிட்ட தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 251 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 850 பிடிஎஸ் சீட்டுகள், அரசு கல்லூரிகளில் 85 இடங்கள் உள்ளன.
பழைய மாணவர்கள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் பிளஸ்டூ தேர்வில் முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்த ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெற்றது.
இதையடுத்து பழைய பிளஸ்டூ மாணவர்கள் 400 பேர் எம்பிபிஎஸ், பிஇ படிப்பில் சேர்ந்தனர். இவ்வாறு பழைய மாணவர்கள் எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் அந்த தடையை நீக்கியது. இதையடுத்து கடந்த ஆண்டு எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் இடம் பிடித்த பழைய மாணவர் பொள்ளாச்சி அஸ்வின்குமார் சென்னை மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
எனவே இந்த ஆண்டும் அதிக மார்க் வாங்கியுள்ள பழைய மாணவர்கள் மருத்துவக்கல்விக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால் இம்ப்ரூவ்மெண்ட் தேர்வு எழுதிய மாணவர்கள் அப்படிச்சேரமுடியாது என்று மருத்துவக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்ஆப்பில் மாற்றமில்லை:
பொறியியல் கல்வி தகுதிமதிப்பெண்களில் பொதுப்பிரிவினர் உள்பட அனைவருக்கும் 5 சதவீத அளவுக்கு தமிழக அரசு இந்தாண்டு முதல் குறைத்து நிர்ணயித்துள்ளது.
ஆனால் எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள குறைந்தபட்ச ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எம்பிபிஎஸ் படிப்புக்கு தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு தற்போது உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களில் குறைந்தபட்சம் தலா 60 சதவீதமும், முக்கியப்பாடங்களில் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 70 சதவீதமாகவும் இருக்கவேண்டும்.
இதேபோல பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களே தொடர்கிறது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு குறைந்தபட்ச கூட்டு மதிப்பெண் 40 சதவீதமாகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications