பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற மே 15 கடைசி- தேர்வுத் துறை
சென்னை: பிளஸ் 2 எழுதிய மாணவர்கள் தங்களது விடைத்தாளை மறுக்கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய ஜெராக்ஸ் நகல் கோருவதற்கு மே 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் தெரிவித்தார்.
இதுகுறித்து வசந்தி ஜீவானந்தம் கூறுகையில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களுக்கு விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 12 முதல் 15ம் தேதி வரை வழங்கப்படும்.
தேர்வுத் துறை தலைமை அலுவலம், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் விண்ணப்பங்களை பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மேற்கூறிய அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். ஜெராக்ஸ் நகல் கோரி விண்ணப்பிக்க ஒரு பாடத்துக்கு தலா ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். அரசு வங்கியில் Director of Government Examinations, Chennai-6. என்ற பெயருக்கு டிடி. எடுத்து ஒப்படைக்க வேண்டும்.
மறுமதிப்பீடு:
விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் கட்டாயம் ஜெராக்ஸ் நகல் கோரி பெறவேண்டும். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோருவோர் ஜெராக்ஸ் நகல் பெற்ற 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்கக் கட்டணம் ரூ.505 செலுத்த வேண்டும். மறு கூட்டல் கோருவோர் தமிழ், ஆங்கிலம், உயிரியல் பாடங்களுக்கு மட்டும் ரூ.305 ஆகும். மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், தலைமை அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பிக்கலாம்.
இணையத்திலும் விண்ணப்பிக்கலாம்:
மதிப்பெண் கூட்டலில் தவறு இருப்பதாக கருதினால் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்துறையின் பல்வேறு அலுவலகங்களில் விண்ணப்பங்கள் கிடைக்கும். அப்படி கிடைக்க பெறாதவர்கள் இணையதளத்தில் இருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு செய்யும்போது கட்டணம் செலுத்தலாம். இணைய தள முகவரி: www.tn.gov.in/dge
மே-21க்குள் மதிப்பெண் சான்றிதழ்:
மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முலமாக வழங்கப்படும். மே 21 வரையில் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். தனித் தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications