ஒபாமா அணிக்கு தாவிய ஹிலாரி ஆதரவு பிரதிநிதிகள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவான 3 பிரதிநிதிகள் திடீரென்று ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் அக்கட்சியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. அதில் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும், கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமாவும் போட்டியிடுகின்றனர். மொத்தமுள்ள 50 மாநிலங்களில் 47ல் தேர்தல் முடிந்துவிட்டது.
அதில் ஒபாமாவை 1,815 பிரதிநிதிகளும், ஹிலாரியை 1,672 பிரதிநிதிகளும் ஆதரித்துள்ளனர். ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளராக தேர்வாக 2,025 வாக்குகளை பெற வேண்டும்.
இதுதவிர சிறப்பு பிரதிநிதிகளில் இதுவரை ஹிலாரிக்குத்தான் அதிக ஆதரவு இருந்தது. இந்நிலையில் ஹிலாரியை ஆதரித்துவந்த 3 சிறப்பு பிரதிநிதிகள் ஒபாமாவுக்கு ஆதரவாக அணி மாறிவிட்டனர். ஆனாலும் போட்டியில் இருந்து விலக ஹிலாரி மறுத்துவிட்டார். இதனால் ஜனநாயக கட்சியில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications