பஜாஜ்-ரெனால்ட்-நிஸ்ஸான் இணைந்து தயாரிக்கும் ரூ. 1 லட்சம் கார்
டெல்லி: டாடாவின் நானேவுக்கு போட்டியாக பஜாஜ் நிறுவனமும் ரூ. 1 லட்சத்துக்கு கார்களை தயாரிக்கவுள்ளது. இந்த கார் 2011ம் ஆண்டு விற்பனைக்கு வரும்.
பிரான்சின் ரெனால்ட், ஜப்பானின் நிஸ்ஸான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த கார் தயாரிப்பில் இறங்குகிறது பஜாஜ்.
நாட்டின் முன்னணி இரு சக்கர கார் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், ஆட்டோக்களையும் தயாரித்து வருகிறது.
இந் நிலையில் கார் தயாரிப்பில் காலடி எடுத்து வைக்கவுள்ளது. இதற்காக ரெனால்ட்-நிஸ்ஸான் ஆகியவற்றுடன் இணைந்து புதிய நிறுவனத்தை பஜாஜ் துவங்கவுள்ளது.
இந்த நிறுவனத்தில் பஜாஜ் 50 சதவீதமும் ரெனால்ட், நிஸான் ஆகியவை தலா 25 சதவீதமும் முதலீடு செய்யவுள்ளன.
இந்த கார்கள் ரூ. 1 லட்சம் விலையுடன் கூடிய சிறிய ரக கார்களாக இருக்கும் என பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு யு.எல்.சி. என இப்போதைக்கு 'கோட் நேம்' சூட்டப்பட்டுள்ளது. பின்னர் உரிய பெயர் தேர்வு செய்யப்படும்.
இந்த கார் தயாரிப்புக்காக மகாராஷ்டிர மாநிலம் சக்கானில் புதிய தொழிற்சாலையை பஜாஜ் கட்ட ஆரம்பித்துள்ளது.
வருடத்துக்கு 4 லட்சம் கார்களை தயாரிக்கும் வகையில் மிக பிரமாண்டமான தொழிற்சாலையாக இது உருவாக்கப்பட்டு வருகிறது.
இன்னும் 3 ஆண்டுகளில் கார் தயாரிப்பு தொடங்கும். 2011ம் ஆண்டில் கார் விற்பனை தொடங்கும். இந்தியா தவிர பிற நாடுகளுக்கும் இந்த கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications