சென்னை மெட்ரோ, புறநகருக்கு தனி போலீஸ் கமிஷனர்கள்

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னை மாநகர போலீஸ்துறை இரண்டாக பிரிக்கப்பட்டு மாநகர, புறநகர் என தனித்தனி கமிஷனர்களின் கீழ் செயல்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

150 ஆண்டுகால பாரம்பரிய சென்னை மாநகர போலீஸ் துறை இரண்டாக பிரிக்கப்படுகிறது. மாநகரம் தவிர புறநகருககு என இனி தனி காவல் சரகம் உருவாக்கப்படுகிறது.

மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் நிர்வாகக் காரணங்களுக்காக இதேபோன்று தனித்தனியாக கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை புறநகர் பகுதிக்கு இரண்டு கமிஷனர்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத்தில் புறநகர், மாநகர் என தனித்தனி கமிஷனர்கள் உள்ளனர். இதேபோல் சென்னையிலும் தற்போது பிரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் சரகத்தின்கீழ் தற்போது மக்கள் தொகை 1.2 கோடிக்கு மேல் பெருகிவிட்டிருப்பதை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புறநகர் பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. அங்கு ஏராளமான வீடுகள், அதிகரித்துவரும் வாகனப் போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகள் பெருக்கம் ஏற்பட்டிருப்பதால் தனி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை அமைக்கவேண்டியது அவசியமாகிறது.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+