அரசு விழாவில் பாமக - திமுக மோதல் !
விழுப்புரம்: திமுக அமைச்சர் பொன்முடி மீதான அதிருப்தியால் விக்கரவாண்டியில் நடந்த தமிழக அரசு விழாவை பாமகவினர் புறக்கணித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் சார்- பதிவாளர் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல் பாமக-வினர் புறக்கணித்தனர். மேலும் அமைச்சர் பொன்முடி மீது மீண்டும் குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளனர்.
இது குறித்து பாமக மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் அம்மன் கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்
விக்ரவாண்டி சார்பதிவாளர் திறப்பு விழாவில் உள்ளூர் பாமக எம்பி தன்ராஜ்க்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.
100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. தமிழக அரசிடம் பாமக போராடி புதிய கட்டடம் கட்டச் செய்தது.
ஆனால் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு வருடம் ஆகியும் திறப்பு விழா நடக்கவில்லை. மூடிகிடக்கும் அலுவலகத்தை உடனடியாக திறக்காவிட்டால் ஆர்பாட்டம் நடத்தப்படும் என பாமக எச்சரிக்கை செய்த பின்பு இந்த திறப்பு விழா நடத்தப்பட்டது.
எந்த அரசு விழாவிலும் எம்பி தன்ராஜ்க்கு உரிய முக்கியத்துவத்தை அமைச்சர் பொன்முடி அளிப்பது இல்லை. கூட்டணி தர்மம் காக்கவே நாங்கள் அமைதி காத்து வருகிறோம்.
இந்தவிழாவிலும் பொன்முடி இதேபோல நடப்பதால் மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. எனவே இந்த விழாவை புறக்கணி்க்கிறோம் என்றார்.
விழுப்புரம் மாவட்ட அரசியலில் ஏற்கனவே அமைச்சர் பொன்முடிக்கும், பாமகவுக்கும் மோதல் ஏற்பட்டு அமைதியான நிலையில் இந்த அரசு விழா மூலம் மீண்டும் மோதல் வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications