நேபாள மாவோயிஸ்ட் தலைவரும் இந்திய தூதர் பேச்சு
காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசந்தாவை அந் நாட்டுக்கான இந்தியத் தூதர் ராகேஷ் சூத் சந்தித்துப் பேசினார்.
நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக பெரும் போர் நடத்தி ஆட்சியைப் பிடித்துள்ளனர் மாவோயிஸ்டுகள். புதிதாக அமையும் அரசு மன்னரின் அனைத்து அதிகாரங்களையும் பறிக்க முடிவு செய்துள்ளது.
இந் நிலையில் இதுவரை மாவோயிஸ்டுகளுடன் நேரடியான தொடர்பை தவிர்த்து வந்த இந்தியா, அவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
மாவோயிஸ்ட் தலைவரும் அடுத்த பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுபவருமான பிரசந்தாவை இந்தியத் தூதர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது புதிய ஆட்சியில் இந்திய-நேபாள உறவு, மன்னர் குடும்பத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இச் சந்திப்பின்போது மாவோயிஸ்ட் இயக்கத்தி் முக்கிய தலைவரான பட்டராயும் உடனிருந்தார்.


Click it and Unblock the Notifications
