கண்டக்டரை செருப்பால் அடித்த கணவன் மனைவி கைது
திருத்துறைப்பூண்டி: ஒடும் பஸ்சில் சிகரெட் குடிப்பதை கண்டித்த கண்டக்டரை செருப்பால் அடித்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருத்துறைபூண்டி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருபவர் அழகப்பன். நேற்று காலை திருத்துறைப்பூண்டியில் இருந்து தஞ்சைக்கு செல்லும் அரசு விரைவு பஸ்சில் பணியில் இருந்தார்.
பயணிகளுக்கு டிக்கட் கொடுத்துக் கொண்டு இருந்தபோது பஸ்சில் ஏறிய ரஜினி பிரியன் என்ற வாலிபர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார். இதை பார்த்த கண்டக்டர் அழகப்பன், பஸ்சில் சிகரெட் குடிக்கக் கூடாது என்று கூறினார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் ரஜினி பிரியன் தொடர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். கண்டக்டர் அவரை மீண்டும் கண்டித்தபோது இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
அப்போது ரஜினி பிரியன் திடீரென தனது காலில் இருந்த செருப்பை கழற்றி கண்டக்டர் அழகப்பனை சரமாரியாக அடித்தார். அவரது மனைவி பாப்பா ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அழகப்பனும் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசில் அழகப்பன் புகார் செய்தார். இதையடுத்து ரஜினி பிரியன், அவரது மனைவி பாப்பாவை போலீசார் கைது செய்தனர்.
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications