கல்லூரி விண்ணப்பத்தில் அரவாணிகளுக்கு தனி இடம் அளிப்பு
நெல்லை: தமிழக கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரேமாதிரியான விண்ணப்பப் படிவம் வழங்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் பாலினம் என்ற இடத்தில் அரவாணிகளுக்கு 'திருநங்கைகள்' என முதன்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் உயர்த்துவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக எல்லா கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தெரிவுமுறை மதிப்பீட்டு திட்டம் (சி.பி.சி.எஸ்) என்ற புதிய திட்டம் நடப்பு கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படுத்த கல்லூரி கல்வி இயக்குநர் நளினி ரவீந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன் அடிப்படையி்ல் விண்ணப்பப் படிவங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விண்ணப்ப மாதிரி அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
இதில் பிளஸ்டூ தேர்வில் பகுதி-3 பாடத்தில் எடுத்த மதிப்பெண்களை 800க்கு மாற்றி குறிப்பிடவேண்டும். புதிய இட ஒதுக்கீடு கொள்கைப்படி கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் ஆகிய பிரிவுகள் தனியாக குறிப்பிட வேண்டும்.
மாணவர்களின் புகைப்படம் ஒட்டுவது உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விண்ணப்பத்தில் பாலினம் பற்றிய விவரம் குறிப்பிடும் இடத்தில் ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக 'திருநங்கை' (அரவாணிகளுக்காக) என்று புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிவியல், கலை, வணிகவியல் என ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் வாங்கத் தேவையில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications