நாகரம்மனுக்கு 22 ஆண்டுக்குப்பின் கொழுக்கட்டை படையல்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகரம்மன் கோயிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மனுக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபாடு நடந்தது.
குமரி மாவட்டம் இரணியல் அருகே ஒடுப்பாறையில் பிரசித்தி பெற்ற நாகர் அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சித்திரை மாதம் கடைசி ஞாயிறு, பௌர்ணமி ஆயில்ய நட்சத்திரம் கூடிவரும் நாளன்று கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
22 ஆண்டுகள் கழித்து கடந்த 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மேற்படி திதிகள் கூடிவந்தன. நீண்டகாலம் கழித்து இந்த நாள் வந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாகர் அம்மன் கோயிலுக்கு திரண்டு வந்திருந்தனர்.
ஏராளமான ஆண்கள் வாழை இலையில் சுற்றப்பட்டு பனை ஓலையில் பெரிய செங்கல் அளவுக்கு பிடிக்கப்பட்டிருந்த கொழுக்கட்டைகளை நெருப்பில் சுட்டு எடுத்தனர். பின்னர் அந்த கொழுக்கட்டைகளை அம்மனுக்கு படைத்தனர்.
கொழுக்கட்டைகள் மீது கோயில் பூசாரி புனித தீர்த்தம் தெளித்த பிறகு பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications