பூங்கோதை-ஏடிஜிபி போன் ஒட்டுக்கேட்பு: சு.சாமி சிடி வெளியீடு
சென்னை: லஞ்ச வழக்கில் உறவினரை காப்பாற்ற ஏடிஜிபியுடன் அமைச்சர் பூங்கோதை சிபாரிசு செய்து பேசியதாக ஆதாரத்துடன் சிடி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சுப்ரிமணிய சாமி.
ஏடிஜிபி உபாத்யாயாவுடன் முதல்வரின் செயலர் பேசியது ஒட்டுக் கேட்பதாக எழுந்த புகார் குறித்து சண்முகம் கமிஷன் நாளை விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் ஏடிஜிபி உபாத்யாயாவுடன் அமைச்சர் பூங்கோதை பேசியதாக சிடி ஆதாரத்தை காண்பித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சாமி.
அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியிதாவது: தனது உறவினராக மின் வாரிய துணை இன்ஜினியர் ஜவஹர் என்பவர் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளதாகவும் அவரை காப்பாற்ற உதவுமாறு லஞ்ச ஒழிப்பு ஏடிஜிபி உபாத்யாயாவிடம் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை பேசியுள்ளார் என்றார். அதற்கு ஆதாரமாக சிடியில் பதிவான உரையாடலை காண்பித்தார். அதில்,
அமைச்சர் பூங்கோதை: ஜவஹர் ஒரு துரதிர்ஷ்டசாலி. அவர் குடும்பம் அவர் வருமானத்தை நம்பிதான் உள்ளது. அவர் என் அப்பாவின் சொந்த அக்கா மகன். இந்த வழக்கில் அவர் மீது கடும் நடவடிக்கை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வழக்கை மின்வாரியத்துக்கு மாற்றிவிடுங்கள். பிறகு அவர்கள் கவனித்து கொள்வார்கள்.
ஏடிஜிபி உபாத்யாயா: வழக்கை நீதி விசாரணைக்கு கொண்டு செல்வது பற்றி மின்வாரிய தலைமை இன்ஜினியர்தான் முடிவு செய்வார். அவர் அனுமதிக்காவிட்டால், மின்துறை நடவடிக்கை எடுக்கும். இதற்கான கோப்பு மின்துறைக்கு அனுப்பப்படும்.
இவ்வாறு அந்த உரையாடல் இருந்தது. இதுகுறித்து சுப்ரமணிய சாமி மேலும் கூறுகையில், இந்த சிடி ஆதாரத்தை கவர்னர் சுர்ஜித் பர்னாலாவிடம் அளித்துள்ளேன். நடத்தை விதிமுறைகளை மீறிய பூங்கோதையை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரியுள்ளேன் என்றார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications