இறைச்சிக்காக கேரளாவுக்கு கடத்தப்பட்ட 49 மாடுகள் மீட்பு
நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற 49 மாடுகளை மீட்டு லாரி, டெம்போக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இறைச்சிக்காக கேரளாவுக்கு மாடு கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை ஓழுகினசேரி வழியாக அளவுக்கு அதிகமாக மாடுகள் ஏற்றி வந்த லாரி மற்றும் டெம்போவை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
அதேவழியாக மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த மேலும் 2 டெம்போக்களையும் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது நிற்காமல் விரைந்து சென்றன. இதையடுத்து போலீசார் விரட்டி சென்று வெட்டுர்ணிமடம் அருகே டெம்போக்களை பிடித்தனர்.
லாரியில் 20 மாடுகளும், 3 டெம்போக்களில் 29 மாடுகளும் என மொத்தம் 49 மாடுகள் மீட்கப்பட்டன. லாரி, டெம்போ டிரைவர்கள் ராபர்ட், நெல்லையைச் சேர்ந்த வீரகுணாநிதி, குழிவிளையைச் சேர்ந்த பென்சாம், செல்லப்பன் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மாடுகளை கடத்தப் பயன்படுத்திய லாரி மற்றும் டெம்போக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications