சைக்கிள் விற்றவர் துப்பு-தீவிரவாதி மாதிரி படம்

இதுகுறி்தது ஜெய்ப்பூர் ஐஜி பங்கஜ் சிங் கூறுகையில், ஜெய்ப்பூரில் தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் சைக்கிள் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள் வாங்கப்பட்ட கடையின் உரிமையாளரை கண்டுபிடித்து விசாரித்து வருகிறோம்.
அவர்கூறிய தகவலின்படி, மொத்தமாக சைக்கிளை வாங்கியவர் 25 வயது மதிக்கத்தக்க சராசரி உயரம் உடைய தீவிரவாதி என்று தெரிந்துள்ளது. கடைக்காரர் தெரிவித்த அங்க அடையாளங்களை வைத்து தீவிரவாதியின் மாதிரி உருவப்படத்தை தயாரித்துள்ளோம் என்றார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா கூறுகையில், போலீஸ் தயாரித்துள்ள தீவிரவாதியின் மாதிரிப்படத்தை ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்படும். இந்த தாக்குதல் சம்பவத்தில் பலருக்கு தொடர்பு இருக்கிறது. இதில் 9க்கும் மேற்பட்ட குழுக்களாக தீவிரவாதிகள் செயல்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குண்டுவெடிப்பில் தீவிரவாதிகள் பயன்படுத்திய சைக்கிள்கள் வாங்கப்பட்ட 2 கடைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் காயமடைந்த விஜய் என்ற ரிக்ஷாகாரர், தாக்குதல் சம்பவத்துக்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக புதிய சைக்கிள்களுடன் வந்த ஒரு பெண் ஹவா மகால் பகுதிக்கு (இங்கும் குண்டு வெடித்தது) கொண்டுவிடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார்.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி இந்த சம்பவத்தில் எந்த தீவிரவாத அமைப்பு ஈடுபட்டது என்பதை உறுதி செய்ய முடிகிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications