போதையி்ல் தகராறு: மப்டி போலீசுக்கு தர்மஅடி
நெல்லை: போதையில் பஸ் பயணிகளிடம் தகராறு செய்த மப்டி போலீஸ் ஏட்டுக்கு சரமாரியாக தர்ம அடி விழுந்தது.
நெல்லை ஜங்ஷன் பஸ் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதனால் 24 மணி நேரமும் இங்கு ஜங்ஷன், பேட்டை, தச்சநல்லூர், ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்படுவர். மேலும் குற்றப்பிரிவு போலீசாரும் மப்டியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பேட்டையை சேர்ந்த குற்றப்பிரிவு ஏட்டு ஒருவர் ஜங்ஷன் பஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பயணிகளிடம் தகராறு செய்யவே ஆத்திரமடைந்த பயணிகள் அவர் போலீஸ்காரர் என தெரியாமல் சராமரியாக அடித்து உதைத்தனர்.
இதையறிந்த புறக்காவல் நிலைய போலீசார் உடனே அங்கு வந்து ஏட்டை மீட்டனர். அதன்பிறகுதான் அவர் போலீஸ்காரர் என பொதுமக்களுக்கு தெரிய வந்தது.
குடிபோதையில் இருந்ததால் இதுபற்றி அவர் புகார் கொடுக்கவில்லை. உயர் அதிகாரிகள் குடிபோதையில் இருந்த ஏட்டுக்கு செம டோஸ்விட்டதாக தெரிகிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications