ஊட்டி மலை ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கம்
ஊட்டி: ஊட்டி மலை ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த 10ம் தேதி ஊட்டி மலை ரயில் காட்டேரி என்ற பகுதியில் பழுதாகி நின்றது. இதையடுத்து அதை சரிசெய்ய ரயில்வே ஊழியர்கள் 8 பேர் டிராலியில் சென்றனர். அப்போது ட்ராலி கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 ஊழியர்களில் பரிதாபமாக பலியாயினர்.
இதனால் மலை ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரயில் பாதை சீரமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. கோடை விடுமுறையை கழிக்கவும், ஊட்டியின் அழகை பார்க்கவும் மலை ரயிலை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இந்நிலையில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில் மலை ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுபாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் காலை 7.30 மணிக்கும், சிறப்பு ரயில் காலை 9 மணிக்கும் இயக்கப்பட உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications