பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டுக்கு இருந்த இறுதித் தடையும் நீங்கியது
டெல்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் இட ஒதுக்கீடுக்கான அனைத்து தடைகளும் நீங்கின.
ஐஐடி உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்து, இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சேமா, நவ்லோகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டது.
இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகியுள்ளது.
அர்ஜூன் சிங் வரவேற்பு:
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன் சிங் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது. இதை வரவேற்கிறேன் என்றார்.
இதற்கிடையே, இட ஒதுக்கீட்டை சுமூகமாக மேற்கொள்வதற்கு வசதியாக அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
இதன் மூலம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உயர்நீதிமன்றங்களில் யாரேனும் மனு செய்தால், மத்திய அரசைக் கேட்காமல் இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அனைத்து மாநில உயர்நீதிமன்ற அரசு வக்கீல்களுக்கும் சட்டத்துறை மூலமாக மனித வள மேம்பாட்டுத்துறை கடிதம் எழுதவுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications