தென்காசி கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தென்காசி: நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்காசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. வியாழக்கிழமை தென்காசி காவல் நிலையத்திற்கு ஒரு மிரட்டல் வந்தது. தொலைபேசியில் பேசிய மர்ம நபர், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் கோவிலுக்கு விரைந்தனர். கோவில் முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. பக்தர்களும் முழுமையாக சோதனையிடப்பட்டனர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் கோவிலின் நுழைவாயிலில் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் மெட்டர் டிடெக்டர் கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பக்தர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கைது செய்யப்பட்ட மேலப்பாளையம் தீவிரவாதி சையத் காசிம் என்கிற ஹீராவுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications