ஆறுதல் சொல்லவந்த திமுக எம்எல்ஏ மீது அதிமுகவினர் தாக்கு
ஒசூர்: கள்ளச்சாராயம் அருந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்றபோது அதிமுகவினருடன் ஏற்பட்ட மோதலில் திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் தாக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பின்னமங்கலம், தேவகானப்பள்ளி கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தானநிலையில் ஒசூர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மாவட்ட திமுக செயலாளரும் எம்எல்ஏவுமான செங்குட்டுவன், கிருஷ்ணகிரி யூனியன் சேர்மன் வெங்கடப்பன் உள்ளிட்ட திமுகவினர் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அதேநேரத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை, மாவட்ட செயலாளர் தென்னரசு, முன்னாள் எம்பி பெருமாள் ஆகியோர் உள்ளிட்ட அதிமுகவினரும் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் தலா ரூ.3000 கொடுத்தனர்.
அப்போது அதிமுகவினரை பார்த்து, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பது மட்டுமல்லாமல் நல்லவர்கள் போல் நிவாரணம் கொடுக்க வந்துவிட்டார்கள் என்று திமுகவினர் கோபத்துடன் கூறினர். பதிலுக்கு அதிமுகவினரும், உங்க ஆட்சியில்தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்கின்றனர். அவர்களை பிடிக்க துப்பு இல்லை. ஆனால் பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை என்றனர்.இதையடுத்து இருதரப்பினர் தாறுமாறாக திட்டிக் கொண்டனர்.
இதில் அதிர்ச்சி அடைந்த தம்பிதுரை நிதியுதவியை பிரித்துவழங்குமாறு தென்னரசுவிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். தொடர்ந்து, மக்களுக்கு அதிமுகவினர் நிதிப்பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் அதிமுகவினரை பார்த்து, நீங்க நிவாரணம் கொடுத்ததுலாம் போதும். எங்கள் அரசு கொடுக்கும். இடத்தை காலி பண்ணுங்க என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த தளி ஒன்றிய அதிமுக கிளை செயலாளர் ராமன் செங்குட்டுவனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த தகராறில் செங்குட்டுவன் கன்னத்தில் பளார் என்று ஒர் அறை விழுந்ததில் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து திமுக, அதிமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப்பணியில் இருந்த போலீசார் லேசான தடியடி நடத்தி அனைவரையும் விரட்டி அடித்தனர்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்?












Click it and Unblock the Notifications