பேநசீர் படம் போட்ட லைட்டருக்கு பாக்.கில் கிராக்கி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மறைந்த முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படம் போட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை சக்கை போடு போடுகிறது.
இந்தியாவில் சிகரெட் பிடிப்பது போன்ற படக் காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி வலியுறுத்துவதற்கு அமிதாப் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தானிலோ நிலைமை தலைகீழாக உள்ளது. அந்நாட்டு தேசத் தந்தை முகமது அலி ஜின்னா, பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி, மறைந்த அவரது மனைவியும் முன்னாள் பிரதமருமான பேநசீர் புட்டோ உள்ளிட்டோரின் உருவப்படம் அச்சடிக்கப்பட்ட சிகரெட் லைட்டர்கள் விற்பனை கன ஜோராக நடக்கிறது. இருந்தாலும் ஜின்னா படம் கொண்ட லைட்டர்களை வாங்க அதிகமாக யாரும் முன்வருவதில்லையாம்.
இதுமட்டுமல்லாமல் அந்த லைட்டர்களில் ஒரு முனையில் டார்ச் லைட் போல் உள்ளது. லைட்டரில் உள்ள பட்டனை அழுத்தினால் டார்ச்சில் இருந்து முக்கிய தலைவர்களின் உருவப்படங்கள், கட்சிகளின் சின்னங்கள் பிம்பங்களாக பாய்கின்றன.
ராணுவச் சீருடையில் பாக் அதிபர் முஷாரப்பின் படம் கொண்ட லைட்டர்களை பல செயின் ஸ்மோக்கர்கள் வாங்கி குவித்துள்ளார்களாம். இது மட்டுமல்லாமல் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் பின்லேடன் லைட்டர்களுக்கும் மவுசு அதிகமாம்.
இந்த லைட்டர்களில் இடம் பெற்ற ஒரே பெண் தலைவர் பேநசீர்தான். 3 மாடல்களில் அவரது படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பேநசீர் ஆதரவாளர்கள் நிறைய பேர் இந்த லைட்டர்களை விரும்பி வாங்குவதால் இதற்கு அதிக கிராக்கி என்று ஒரு கடைக்காரர் தெரிவித்தார். ஒரு லைட்டர் விலை ரூ.50. சீனாவில் இருந்து பாகிஸ்தானுக்கு இந்த லைட்டர்கள் குவிந்துள்ளன.
பாகிஸ்தானைப் பார்த்து, நம்ம ஊரிலும் ரஜினி படம் போட்ட லைட்டர்களை புழக்கத்தில் விட்டு 'பத்த வச்சிட்டியே பரட்டை' என்று வசனம் பேச வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications