சார்க் உறுப்பினராக மியான்மருக்கு இந்தியா ஆதரவு?
டாக்கா: சார்க் அமைப்பு உறுப்பினராக மியான்மர் நாட்டுக்கு இந்தியா ஆதரவு அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (சார்க்) உறுப்பினராக சேர்த்துக் கொள்ளும்படி ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மர் நாடு கோரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசிய பகுதியில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் சார்க் அமைப்பில் தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு சார்க் தலைமைச் செயலகத்துக்கு மியான்மர் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், சார்க் உறுப்பு நாடுகளுக்கு தமது விருப்பத்தை தெரிவித்து ஆதரவு கோரி மியான்மர் அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில் சார்க் அமைப்பின் 15வது உச்சிமாநாடு இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜூலை 27ல் தொடங்குகிறது. அதற்கு முன்பு மியான்மர் அரசு கோரிக்கை பற்றி சார்க் நிலைக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று வங்கதேச வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையில் மியான்மரை உறுப்பினராக சேர்த்துக் கொள்ள இந்தியா ஆதரவு கரம் நீட்டியிருப்பதாக வங்கதேசத்தில் வெளியாகும் ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய ஆதரவை பெற்றுவிட்டால் சார்க் அமைப்பின் 9வது உறுப்பு நாடாக மியான்மர் விளங்கும். இதேபோல் சார்க் உறுப்பினராக ஆஸ்திரேலியாவும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், கொரியா குடியரசு, சீனா, ஜப்பான், ஈரான், மொரீஷியஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் பார்வையாளர்களாக இருந்து வருகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications