குழந்தைகளுக்கு தீ வைத்து தாயும் தற்கொலை
தூத்துக்குடி: குடிகார கணவனால் மனமுடைந்த பெண் தன் 2 குழந்தைகள் மீது கெரசின் ஊற்றி பற்றவைத்து தானும் தற்கொலை செய்துகொண்டார். இதில் ஒரு குழந்தை பரிதாபமாக இறந்தது.
தூத்துக்குடி முத்தையாபுரம் பேரின்ப நகரை சேர்ந்தவர் சாமிதுரை. இவரது மனைவி முத்துசெல்வி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. சோபியா என்ற மகளும், மாரீஸ் என்ற மகனும் உள்ளனர்.
கட்டடத் தொழிலாளியான சாமிதுரைக்கு குடிபழக்கம் உண்டு. அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை துன்புறுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையிலேயே குடித்துவிட்டு வந்த சாமிதுரை மீண்டும் முத்துசெல்வியிடம் தகராறு செய்தார். பின்னர் அவர் வெளியே சென்றுவிட்டார். இந்நிலையில் மனமுடைந்த முத்துசெல்வி தனது வீட்டை பூட்டுக்கொண்டு அங்கிருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீதும், 2 குழந்தைகள் மீதும் ஊற்றிவிட்டு தீயை பற்ற வைத்தார்.
சூடு தாங்காமல் குழந்தைகள் அலறியபோதும் அவர்களை விடாமல் அணைத்துக் கொண்டார். ஆனால் மாரிஸ் மட்டும் தனது அம்மாவின் பிடியில் திமிறி தப்பித்து ஓடி கட்டிலுக்குக் கீழே பதுங்கினான்.
இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் ஓடிவந்து கடப்பாரையால் வீட்டு கதவை உடைத்து நுழைந்தனர்.
அங்கு முத்துசெல்வி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த சிறுமி சோபியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். அங்கு அவள் இறந்தாள். சிறுவன் மாரீஸ் லேசான காயங்களுடன் உயிர் தப்பி கொண்டான். இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
--
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications