யாஹூ, மைக்ரோசாப்ட் ரசிகர்களை தொடர்ந்து 'சுருட்டும்' கூகுள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கூகுள் சர்ச் என்ஜினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் மட்டும் இன்டர்நெட் சேவையை பயன்படுத்தியோரில் 61.6 சதவீதம் பேர் கூகுளில் தான் அதிகமான 'தேடுதல் வேட்டை' நடத்தியுள்ளனர். இது அதற்கு முந்தைய மாதத்தைவிட 2 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல் மாத தேடுதல் சேவை பயன்பாட்டில் யாஹூவுன் பங்கு 20.4 சதவீதமாகும். அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இது 0.9 சதவீதம் குறைவாகும். இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களில் சுமார் 1 சதவீதத்தினரை கூகுளிடம் யாகூ இழந்துள்ளது.
அதேபோல் மைக்ரோசாப்டின் மார்ச் மாத வாடிக்கையாளர் பங்கு 9.4 சதவீதமாக இருந்தது. ஏப்ரலில் இது 9.1 ஆக குறைந்தது. இந்த வாடிக்கையாளர்களையும் கூகுள் கவர்ந்திருக்கிறது.
இந் நிலையில் யாஹூவை வாங்க முடியாவிட்டாலும் அதன் சர்ச் என்ஜின் சேவையை மட்டுமாவது வாங்க மைக்ரோசாப்ட் இப்போது முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் பற்றிய முழு விவரம் தெரியாவிட்டாலும் ஆன்லைன் சர்ச் மற்றும் அதைச் சார்ந்த விளம்பர சேவையை விரிவுபடுத்தும் மைக்ரோசாப்ட் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த முயற்சி நடந்து வருவதாகத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications