மேலும் ரூ.11,680 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி
டெல்லி: விவசாயிகளுக்கு மேலும் ரூ.11,680 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் 2008-09க்கான பட்ஜெட் தாக்கலின்போது ரூ.60,000 கோடிக்கு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. விவசாயிகள் நஷ்டமடைந்து தற்கொலை செய்வதைத் தடுக்கவும், விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் மன்மோகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மேலும் ரூ.11,680 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தக் கடன்தள்ளுபடி ரூ.71,680 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் கூடுதல் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.
பிரதமர் மன்மோகன் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக, விவசாயிகள் கடன் தள்ளுபடி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி அதிகம் பேர் பயனடையும் வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications