பலிகள்: விஷச் சாராய முக்கிய சப்ளையர் மர்மச் சாவு
பெங்களூர்: தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 200க்கும் மேற்பட்டவர்களை பலி வாங்கிய விஷச்சாராயத்தை சப்ளை செய்தவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி சௌந்தரராஜன். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பலரது உயிரைக் குடித்த விஷச்சாராயத்தை விற்றவர். இந்த வழக்கு தொடர்பாக சௌந்தரராஜன், அவரது மனைவி சத்யா, மருமகள் ரேகா ஆகியோரை போலீசார் நேற்று (மே 22) கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் விஷச்சாராயத்தை அவர்களுக்கு சப்ளை செய்தது யார் என்ற விவரம் அம்பலமானது. பெங்களூர் ஊரக மாவட்டம் கட்டிகெனஹள்ளியை சேர்ந்த முஸ்து என்ற முஸ்டாக் என்பவர்தான் இந்த கொலைகார விஷச்சாராயத்தை சப்ளை செய்த ஏஜெண்ட்.
கடந்த மே 17ம் தேதியன்று சௌந்தரராஜனுக்கு 500 பாக்கெட் கள்ளச்சாராயத்தை முஸ்டாக் சப்ளை செய்துள்ளார். அவற்றை டி.ஜே.ஹள்ளி பகுதியி்ல் தொழிலாளர்களுக்கு சௌந்தரராஜன் விற்றுள்ளார். மே 18ம் தேதியன்று மட்டும் 450 பாக்கெட்டுகளை சௌந்தரராஜன், அவரது மனைவி, மருமகள் ஆகியோர் விற்றுள்ளனர்.
இந்த பாக்கெட்டுகளில்தான் தொழிற்சாலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷத்தன்மை கொண்ட மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது. இதை வாங்கிக் குடித்த பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர். பலருக்கு பார்வை பறிபோனது.
இந்த நிலையில் சௌந்தரராஜன் அளித்த தகவலின்பேரில் கட்டிகெனஹள்ளியில் உள்ள முஸ்டாக் வீட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு வீட்டுக்குள் இறந்து கிடந்துள்ளார் முஸ்டாக்.
அவர் விற்ற விஷச்சாராயத்தை குடித்து ஏராளமானவர்கள் பலியானதை கேள்விப்பட்டு பயந்துபோய் விஷம் அருந்தி முஸ்டாக் தற்கொலை செய்திருக்கலாம் என்று பெங்களூர் போலீஸ் குற்றப்பிரிவு இணை ஆணையர் கோபால் ஹொசூர் தெரிவித்தார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications