கர்நாடகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை

கர்நாடக சட்டசபையின் 224 சீட்களுக்கு, மே 10, 16, 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. 2242 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 108 பேர் பெண்கள்.
தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது. மொத்தம் 46 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
பாஜக தனிப் பெரும் கட்சியாக வரும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனவும் கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன.
பாஜக இத்தேர்தலில் 224 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.எஸ்.எடியூரப்பா, முன்னாள் முதல்வர் பங்காரப்பாவை எதிர்த்து ஷிகாரிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தரம்சிங், மல்லிகார்ஜூன கார்கே, எச்.கே.பாட்டீல், அம்பரீஷ், எம்.பி.பிரகாஷ், சித்தராமையா ஆகியோர் பிற முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.
மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் முக்கிய வேட்பாளர்களாக முன்னாள் முதல்வர் குமாரசாமி, மாநிலத் தலைவர் மிராஜூதின் பாட்டீல், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோர் உள்ளனர்.
தேர்தலில் காங்கிரஸ் 222 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் 219 பேரும் களத்தில் இருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில் இறங்கியது. இக்கட்சியின் சார்பில் 217 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு என்பதால் காலை 10.30 மணி முதல் முடிவுகள் தெரிய வரும். மாலை 4 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகி விடும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் கர்நாடகத்தில் தேர்தல் நடந்துள்ளது. இந்தியாவிலேயே தொகுதி மறு சீரமைப்பின் அடிப்படையில் தேர்தல் நடந்த முதல் மாநிலம் கர்நாடகம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபையைக் கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் நாளைய வாக்கு எண்ணிக்கையை கர்நாடக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த தேர்தலில்..
கலைக்கப்பட்ட சட்டசபையில் பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், காங்கிரசுக்கு 65 எம்எல்ஏக்களும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 58 எம்எல்ஏக்களும், ஐக்கிய ஜனதா தளத்துக்கு 5 எம்எல்ஏக்களும் இருந்தனர் என்பது நினைவுகூறத்தக்கது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாளை தட்ஸ்தமிழில் உடனுக்குடன் காணலாம்.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ என்ன திமுக ஆளா? மரியாதை இல்லாமல் பேசிய அமைச்சர்கள்.. சட்டசபை செயலர் சீனிவாசன் ராஜினாமா பின்னணி?! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications