கோவில் விழாவில் பெண்களிடம் கேலி-அடிதடி!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் அடிதடி ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது கல் வீச்சு தாக்குதல் நடந்தது.
கந்தர்வகோட்டை நெப்புசை கிராமத்தில் குளப்பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களாக திருவிழா நடந்து வந்தது.
கோவில் திருவிழா நிறைவு நாளன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவிலுக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். அந்தப் பெண்களை சில இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.
மேலும் சில இளைஞர்கள் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு தகராறு ஏற்பட்டது. இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் அடிதடியில் இறங்கினர்.
இதையடுத்து தவறு செய்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் போலீசார் மீது சரமாரியாக கல் வீசி தாக்கியது.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் இருவர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய பிரகாஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications