நெல்லை மருத்துவமனையில் பெண் மர்ம சாவு
நெல்லை: நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் தூங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
நெல்லை டவுண் ஜெயபிரகாஷ் தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம்.. நெல்லையில் உள்ள டாஸ்மக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தங்கலெட்சுமி. திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது.
இந்நிலையில் தங்கலெட்சுமி மீண்டும் கர்ப்பமானார். பிரசவத்திற்காக அவரை டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூன்று நாட்களுக்கு முன் தங்கலெட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமுடன் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தங்கலெட்சுமி தனக்கு துக்கம் வரவில்லை என டாக்டர்களிடம் கூறினார். இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தூங்குவதற்கான ஊசி போட்டனர். அதன்பிறகு தங்கலெட்சுமி தூங்கிவிட்டார். அருகில் அவரது குழந்தையும் தூங்கி கொண்டிருந்தது.
நேற்று காலை தங்கலெட்சுமி உடலில் அசைவு இல்லாமல் இருப்பதை பார்த்த உறவினர்கள் டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். டாக்டர்கள் வந்து தங்கலெட்சுமி உடலை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. மேலும் அவரது உடல் விறகுகட்டை போல் இறுகி காணப்பட்டதால் தங்கலெட்சுமி இறந்து பலமணி நேரம் ஆகியிருப்பது தெரிய வந்தது.
அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தவறான ஊசி போட்டதால்தான் தங்கலெட்சுமி இறந்துவிட்டதாக கூறி டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையின் முன் கூடி முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications