மதச்சார்பற்ற ஜனதாளத்துடன் காங். கூட்டணி வைக்கலாம் - மொய்லி
பெங்களூர்: மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கட்சி இணைந்து செயல்பட முடியும். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கிறது. 2வது இடத்தில் காங்கிரஸும், 3வது இடத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் உள்ன.
இந்த நிலையில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பேச்சு சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க முயலலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி கூறுகையில், இரு கட்சிகளும் ஒத்த கருத்துடையவை. மதச்சார்பற்ற சக்திகளான இவை இரண்டும் இணைந்து செயல்படுவதில் தவறில்லை. சிக்கலும் இல்லை.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி குறித்து பரிசீலிக்க முடியும் என்றார் மொய்லி.
கூட்டணி கிடையாது - குமாரசாமி:
அதேநேரத்தில் 3வது இடத்தைப் பிடித்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி, பாஜகவுடனோ அல்லது காங்கிரஸுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார்.
எங்களது நிலையில் எந்த மாற்றமும் இல்லை. யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றார் குமாரசாமி. இருப்பினும் மதச்சார்பற்ற ஜனதாதளம் நிமிடத்திற்கு நிமிடம் கொள்கை முடிவுகளை மாற்றும் என்பது கடந்த கால அனுபவம் என்பதால் கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தேவெ கெளடா ஆதரவு தரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக கூட்டணி அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
தங்க இறக்குமதியில்.. ஒரு கிலோவுக்கு ₹10 லட்சம் தள்ளுபடி.. வரி 15% உயர்வு.. என்னங்க நடக்குது? -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications