அடுத்த முதல்வர் எதியூரப்பா தான்-வெங்கையா நாயுடு
டெல்லி: கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக எதியூரப்பாவே பதவியேற்பார் என பாஜக தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.
இன்று நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் முதன் முறையாக தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தங்களது கட்சியி்ன் சார்பில் எதியூரப்பாவே முதல்வராவார் என வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். முன்னதாக எதியூரப்பாவின் எதிர் கோஷ்டியை சேர்ந்தவரான அனந்தகுமார் தரப்பு, அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று செய்தியைப் பரப்பியது.
ஆனால், எதியூரப்பா தான் முதல்வர் என பாஜக தலைமை திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.
இது குறித்து நாயுடு கூறுகையில், எதியூரப்பா தான் அடுத்த முதல்வர். இதில் குழப்பம் ஏதுமில்லை. இந்த வெற்றியின் மூலம் தென்னகத்தில் பாஜகவுக்கு நுழைவு வாயில் திறந்துள்ளது என்றார்.
இதற்கிடையே தங்களை ஆட்சியமைக்க உடனே அழைக்க வேண்டும் என ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூருக்கு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகத்தில் கிடைத்துள்ள இந்த வெற்றியின் மூலம் நாட்டில் 7 மாநிலங்களில் பாஜக தனியாக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications