கிரெடிட் கார்ட் மோசடி-ரூ. 45 கோடி 'ஸ்வாகா'

சென்னையில் சமீப காலமாக பல்வேறு வகையான மோசடிச் செயல்கள் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. தங்கக் காசுத் திட்டம் என்ற பெயரில் ரூ. 45 கோடி வரை ஸ்வாகா செய்த 7 பேர் சிக்கினர். இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி மோசடி செய்த 7 பேரை போலீஸார் பிடித்துள்ளனர்.
இந்தக் கும்பலின் தலைவர் போல செயல்பட்டவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இக்கும்பல் ரூ. 65 லட்சம் வரை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இக்கும்பலிடமிருந்து ஒரு கார், 15 கம்ப்யூட்டர்கள், 35 பவுன் தங்க நகைகள், 47 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா செல்வா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்தக் கும்பலைப் போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர். தனது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி யாரோ சிலர் ரூ. 3.5 லட்சம் வரை பணம் எடுத்திருப்பதாக இவர் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து தனிப்படை போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் ராமாவரத்தைச் சேர்ந்த சேவியர் மேத்யூ என்பவர் சிக்கினார். இவர் ஒரு தொழிலதிபர். போலியான ஆவணங்களைக் கொடுத்து பல்வேறு பிரபல வங்கிகளிலிருந்து 70 கிரெடிட் கார்டுகளை இவர் வாங்கி வைத்திருந்தார்.
இவற்றைப் பயன்படுத்தி ரூ. 65 லட்சம் அளவுக்கு மோசடியாக பணம் எடுத்துள்ளார். இவரைக் கைது செய்த போலீஸார், அவருக்கு உடந்தையாக இருந்த ராஜாமுகமது (22), கார்த்திக் (25), ராஜேஷ்கண்ணா (22), சசிக்குமார், ரவி (32), ஜெய்கணேஷ் ஆகியோரையும் கைது செய்தனர்.
-
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications