வாட்டாள் படுதோல்வி-டெபாசிட்டும் 'காலி'
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தார்.
கன்னட சளுவாளி இயக்கம் என்ற அமைப்பின் தலைவர்தான் வாட்டாள். இதுதவிர கர்நாடக எல்லைப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
தமிழர்களுக்கு எதிராக அடிக்கடி போராட்டம் நடத்துபவர்.
முன்னாள் எம்.எல்.ஏவான வாட்டாள், சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில், புட்டரங்க ஷெட்டி, பாஜக சார்பில், மகாதேவ் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஷெட்டி வெற்றி பெற்றார். வாட்டாள் நாகராஜ், வெறும் 11, 413 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட்டைப் பறிகொடுத்து படுதோல்வி அடைந்தார்.
பாட்ஷா நடிகர் தோல்வி:
தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பல நடிகர்களும் போட்டியிட்டனர். இவர்களில் நடிகர் ஜக்கேஷ் தவிர மற்ற அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பியான அம்பரீஷ், ஸ்ரீரங்கப்பட்டணா தொகுதியில் போட்டியிட்டார். காவிரிப் பிரச்சினையின்போது தனது மத்திய அமைச்சர் பதவியை உதறியவர் அம்பரீஷ். ஆனால் காவிரிப் படுகையில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பாட்ஷா படத்தில் ரஜினியின் தம்பியாக நடித்திருந்த நடிகர் சசிகுமார், காங்கிரஸ் வேட்பாளராக செல்லகரே தொகுதியில் போட்டியிட்டார். அவரும் தோற்றுப் போய் விட்டார்.
காமெடி நடிகை உமாஸ்ரீயும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.
இதேபோல நடிகர் சாய்குமார் பாஜக வேட்பாளராக பாகேபள்ளி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார். இயக்குநர் - நடிகர் மகேந்தர், கொள்ளேகால் தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
காமெடி நடிகரும், ரஜினியைப் போலவே இமிடேட் செய்து நடிப்பவருமான ஜக்கேஷ் மட்டும் இத்தேர்தலில் வெற்றியை சுவைத்துள்ளார். இவர் துருவகரே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
9வது முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் தரம்சிங இத்தேர்தலில் வென்றிருந்தால் சாதனை படைத்திருப்பார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியுற்று விட்டார். அதேசமயம், 9வது முறையாக போட்டியிட்ட மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார்.
இருப்பினும் கடந்த 8 முறை ஒரே தொகுதியில் போட்டியிட்ட கார்கே இந்த முறை தொகுதி மாறி போட்டியிட்டதால் அவருக்கு சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications