Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திக்: கொடி ரெடி-கட்சி எப்போ?

Subscribe to Oneindia Tamil

அருப்புக்கோட்டை: எனது புதுக் கட்சியின் கொடியில் இரு கைகள் இணைந்திருப்பது போல இருக்கும் என்று நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ள நடிகர் கார்த்திக் புதுக் கட்சி தொடங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் சென்னையில் மாநில, மாவட்ட அளவிலான நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் நேற்று மதுரை வந்தார் கார்த்திக்.

அங்கு தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். புதுக் கட்சி தொடங்குவது குறித்து இந்த ஆலோசனை நடைபெற்றதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். விரைவில் புதுக் கட்சி தொடங்கப்படும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த நிலையில் அருப்புக்கோட்டையில் நடந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் கார்த்திக் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், தேவர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். இந்த அழைப்பிதழை எனக்கு கொடுக்கும்போது, நான் பதவியில் இருந்தேன். இப்போது பதவியில் இருந்து நீக்கி விட்டார்கள். என்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு இவர்கள் யார்? இவர்கள் நீக்கினாலும் உங்கள் மனதில் எப்போதும் எனக்கு இடம் உண்டு.

தேவர் நூற்றாண்டு விழா தொடங்கியதில் இருந்து 9 முறை அவரது சிலை களங்கப்படுத்தப்பட்டு உள்ளது. இது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தில் நாம் இல்லாமல் பார்வர்டு பிளாக் கட்சி தலைவர்கள் வடக்கே இருந்து வந்து கால் பதிக்க முடியாது.

கடந்த 2006-ம் ஆண்டு சென்னை வந்திருந்த பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளர் பிஸ்வாசுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டபோது உடனடியாக அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தேன். அவர் அருகில் அமர்ந்திருந்த என் கையை பிடித்துக் கொண்டு முத்தமிட்டு, நீங்கள்தான் தமிழகத்தில் பார்வர்டு பிளாக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.

எனக்கு பதவி ஆசை கிடையாது. தற்போது அவரை சுற்றியுள்ள சிலரது பேச்சை கேட்டு பதவி நீக்கம் செய்து விட்டதாக கூறுகிறார்.

தொண்டர்களாகிய உங்கள் நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் இனி யோசிக்க வேண்டும். நான் உங்கள் நன்மைக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். விரைவில் இதுபற்றி அறிவிப்பேன்.

நான் தொடங்க உள்ள கட்சியின் கொடியில் இரண்டு கைகளும் இணைந்து இருப்பது போல் சின்னம் இடம் பெறும். நான் உங்கள் நன்மைக்காக எப்போதுமே பாடுபடும் தொண்டன்தான் என்றார் கார்த்திக்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+