திருவிழாவுக்கு தடை-முதல்வருக்கு பிரசாதம் அனுப்பி போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே உள்ள பாவூர் சத்திரத்தில் கோவில் திருவிழாவுக்கு தடை வித்த போலீசாரை கண்டித்து தமிழக முதல்வருக்கு பொது மக்கள் பிரசாதம் அனுப்பி தங்களது எதிர்ப்பை நூதன முறையில் வெளிக்காட்டினர்.
திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கோவிலாகும்.
இந்த கோவிலில் கடந்த சில தினங்களாக வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழாவுக்கு அனுமதி பெறவில்லை என்று கூறி திடீரென போலீஸார் திருவிழாவுக்குத் தடை விதித்தனர். இதனால் கடைசி நாள் விழாவை நடத்த முடியாமல் போனது.
போலீஸாரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், விழா நடத்தா விட்டால் சாமி குத்தம் ஆகி விடும் என முடிவு செய்து சுப்பிரமணியசுவாமிக்கு நேற்று பொங்கல் விழா வைத்து வழிபட்டனர்.
மேலும், போலீசாரின் செயலை கண்டிக்கும் விதமாகவும், சாமி குத்தம் வராமல் இருக்கவும் தமிழக முதல்வர், தமிழக டிஜிபி, நெல்லை மண்டல டிஐஜிக்கு தபாலில் அந்த பொங்கலை பிரசாதமாக அனுப்பி வைத்தனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications