பாஜகவுக்கு 6 சுயேச்சைகளும் ஆதரவு!!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக 110 இடங்களை வென்று தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 இடங்களும் கிடைத்துள்ளன. சுயேச்சைகளுக்கு 6 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது.
பாஜக ஆட்சி அமைக்க 3 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டனர். இதில் பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 3 சுயேச்சைகள் நேற்று காலை முதலி்ல் ஆதரவு தெரிவித்தனர். இந் நிலையில் மற்ற இரு காங்கிரஸ் சுயேச்சைகளும் நேற்றிரவு ஆதரவு தெரிவித்தனர்.
அவர்களது விவரம்: எம்.எல்.ஏக்கள் வெங்கடரமணப்பா (பவகதா), சுதாகர் (ஹிரியூர்), நரேந்திரசாமி (மலவள்ளி), கூலிஹட்டி சேகர் (ஒசதுர்கா), சிவராஜ் தங்கடாகி (கனககிரி).
இந் நிலையில் மிச்சமிருந்த ஒரே ஒரு சுயேச்சையான ஒரத்தூர் பிரகாஷ் இன்று காலை பாஜகவுக்கு ஆதரவு தெரிவி்த்தார். இவர் காங்கிரஸ் தலைவர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராவார். கோலார் மாவட்டத்துக்கு காவிரி நீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவர் விதித்துள்ளார்.
முன்னதாக நேற்று மாலை பிரகாஷ் தவிர்த்த மற்ற 5 சுயேச்சைகளுடன் பாஜக தலைவர்கள் அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, எதியூரப்பா, சதானந்த கெளடா உள்ளிட்டோர் ஆளுநரைச் சந்தித்தனர்.
அப்போது தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரி எதியூரப்பா ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். மேலும் ஐந்து சுயேச்சை எம்.எல்.ஏக்களை ஆளுநரிடம் அறிமுகப்படுத்தி அவர்கள் தன்னை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து இன்று எதியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் எனத் தெரிகிறது.
அதேபோல தற்போது கர்நாடகத்தில் உள்ள குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கும் அவர் கடிதம் எழுதவுள்ளார். இதையடுத்து நாளை அல்லது மறுதினம் எதியூரப்பா தலைமையிலான அரசு பதவியேற்கும் எனத் தெரிகிறது.
-
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு












Click it and Unblock the Notifications