பாண்டியன் எக்ஸ்பிரசில் 'ஹனிமூன்' கோச்!
மதுரை: இளம் தம்பதிகளின் வசதிக்காக மதுரை-சென்னை இடையிலான பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹனிமூன் கோச் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 22 கோச்சுகளில் ஒரு கோச்சை மட்டும் விசேடமாக மாற்றி, ஹனிமூன் கோச் என மாற்றியுள்ளனர். இந்தக் கோச்சில், 4 ஜோடிகள் பயணிக்கலாம். இதுதவிர 4 பேர் செல்லக் கூடிய வகையிலான 3 கூபே பெட்டிகள் உள்பட மொத்தம் 18 பேர் இந்த கோச்சில் பயணிக்க முடியும்.
இந்தக் கோச்சில் மதுரையிலிருந்து சென்னைக்குப் பயணிக்கு ஒரு ஜோடிக்கு ரூ. 2,750 கட்டணமாகும்.
இந்த கோச் முழுவதும் தரையில் ரெட் கார்பெட் விரித்துள்ளனர்.
வெப்ப நிலைக்கேற்ப தானாக மாறிக் கொள்ளும் வகையிலான ஏசி, டீப்பாய், லெட்டர் பேடுகள், படுக்கை, கம்பளி, சோப், பட்டன் விளக்குள் என ஸ்டார் ஹோட்டல் வசதிகள் அத்தனையும் இந்த கோச்சில் அடக்கம்.
பெல் அடித்தால் ஓடி வந்து உபசரிக்க அட்டென்டர்களும் உண்டு.
விரைவில் டிவி, எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் சேர்க்கவுள்ளனராம். மேலும் ரயில் எந்த இடத்தில் போய்க் கொண்டிருக்கிறது என்பதை அறியும் வகையில் எலக்ட்ரானிக் டிஸ்பிளே வசதியும் செய்யப்படவுள்ளதாம்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி












Click it and Unblock the Notifications