ரஷ்ய சரக்கு விமானம் நொறுங்கி விழுந்து 9 பேர் பலி
மாஸ்கோ: ரஷ்யநாட்டு சரக்கு விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்ததில் அதில் இருந்த விமானி உள்ளிட்ட 9 ஊழியர்களும் உடல் சிதறி பலியாயினர்.
ரஷ்யாவை சேர்ந்த மாஸ்கோவியா ஏர் கேரியர்ஸ் என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனத்துக்குச் சொந்தமான ஏஎன்-12 ரக சரக்கு விமானம் ஒன்று சிலியாபின்ஸ் நகரில் இருந்து பெர்ம் நகருக்கு நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த விமானத்தில் விமானிகள் உள்பட 9 ஊழியர்கள் பயணம் செய்தனர்.
தரையில் இருந்து விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அந்த விமானத்தில் இருந்து அவசர அழைப்பு வந்தது. விமானியின் அறைக்குள் கரும்புகை சூழ்வதால் அவசரமாக விமானத்தைத் தரையிறங்க அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து அந்த விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று மாயமானது. ராடாரில் அந்த விமானத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதையடுத்து விமானத்தை கண்டுபிடிக்க மீட்புப்பணியினர் விரைந்தனர்.
இந்நிலையில் மாஸ்கோ நேரப்படி அதிகாலை 6.30 மணியளவில் சிலியாபின்ஸ் விமான நிலையத்துக்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் அந்த விமானம் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டது. அதிலிருந்த விமானி உள்பட 9 ஊழியர்களும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.
விமானத்தில் ஏற்பட்ட மின்கசிவினால் கோளாறு ஏற்பட்டு பின்னர் தீப்பிடித்திருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தரையிறங்கும் முயற்சியில் உயர் அழுத்த மின் கம்பி மீது விமானம் உரசியதால் வெடித்து சிதறியிருக்கலாம் என்றும் மீட்புப்படை அதிகாரி தெரிவித்தார்.
விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்துள்ளதால் விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் தெரியவரும் என்று ரஷ்ய நாட்டு விமானப்போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications