இன்போசிஸ் நிறுவன வேலைக்கு அரசியல்வாதிகள் சிபாரிசு
மும்பை: உலகின் முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவைச் சேர்ந்த இன்போசிசில் வேலைக்கு சேர்ப்பதற்கு அரசியல்வாதிகள் பலர் சிபாரிசு செய்துள்ளனர். ஆனால் தகுதி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை தேர்ந்தெடுப்பதாக அந்நிறுவனம் தெரிவி்த்துள்ளது.
ஐ.டி.நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் இன்போசிசுக்கு பெங்களூர், சென்னை, புனே, ஹைதராபாத் நகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் வேலைக்குச் சேர விரும்பும் பலரை அரசியல்வாதிகள் சிபாரிசு செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதுபற்றி இன்போசிஸ் வாரிய உறுப்பினர் மோகன்தாஸ் பாய் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக் கொள்ளுமாறு பலரை அரசியல்வாதிகள் சிபாரிசு செய்துள்ளனர். இருப்பினும், தகுதி,தேர்வில் வெற்றி அடிப்படையில் மட்டுமே ஊழியர்களை நியமித்துவருகிறோம் என்றார்.
மேலும், அவர், பலர் நினைப்பதற்கு மாறாக அரசியல்வாதிகள் நல்லவர்கள். அவர்களை தவறாக நினைக்கத் தேவையில்லை. மற்றவர்களைப் போலவே கட்சி பேதமின்றி அவர்களும் வேலைக்கு பலரை சிபாரிசு செய்கின்றனர்.
யார் சிபாரிசு செய்தாலும் நியமன நடைமுறை ஒரேமாதிரியாகத்தான் பின்பற்றப்படுகிறது. தகுதி, தேர்வில் வெற்றிதான் பிரதானம்.
பெங்களூர், புனே அலுவலகங்களில் 45 முதல் 50 சதவீதம் வரை உள்ளூர் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நிதியாண்டில் 25,000 பேருக்கு வேலை அளிக்கப்படும்.
அமெரிக்க நிதிச்சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், பின்னடைவு ஏற்பட்டாலும் இன்போசிஸ் ஆள்சேர்ப்பு தொடரும். மார்ச் 31, 2008 நிலவரப்படி ஊழியர் எண்ணிக்கை 91,187 ஆக உள்ளது. விரைவில் இது ஒரு லட்சத்தைத் தொடும் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications