மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன-வைகோ

புதுக்கோட்டையில் மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ பேசியதாவது:
நமது அரசியல் பயணத்தில் குருஷேத்திர யுத்தத்தை சந்திக்க போகிறோம். அதற்கான ஆயத்த பணிகளில் நாம் ஈடுபட்டு வருகிறோம். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை அலசி ஆராய்கிறவர்கள் மதிமுகவில் உள்ளனர். இந்த கப்பல் மூழ்குகிற கப்பல் அல்ல. நீர் மூழ்கி கப்பலாக மூழ்கி எதிரிகளை துவசம் செய்வோம்.
தமிழர்களின் நலனுக்காக மதிமுக போராடி வருகிறது. இந்த இயக்கத்தை கடந்த 16 வருடங்களாக அழித்து விட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி துடித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் (கட்சியைவிட்டு வெளியேறிய) துரோகிகளை வைத்து வீழ்த்த நினைத்தார். அதுவும் முடியாமல் போனது.
காங்கிரஸ், பாமக, வலது கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், இப்படி ஒவ்வொரு கட்சியையும் உடைத்து சகுனி வேலை பார்ப்பதுதான் கருணாநிதியின் வேலை.
அணுசக்தி ஒப்பந்தத்தை கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இனி யாராலும் காப்பாற்ற முடியாத நிலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தோல்வியின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ளது. யூகோஸ்லாவியா நாட்டில் இருந்து கொசாவோ விடுதலை பெற்றது போல இலங்கையில் இருந்து ஈழம் விடுதலை பெறும்.
விலைவாசி உயர்வு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். தற்போது மத்திய அரசின் செல்வாக்கு சரியத் தொடங்கிவிட்டது. அதன் நாட்கள் எண்ணப்படுகின்றன. மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வராது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழக மக்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர்.
மதிமுக சார்பில் வரும் 18 ம் தேதி சென்னையில் நடக்கும் மாநாடு தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும். திமுகவோடு கூட்டணி வைத்ததால் மதிமுகவுக்கு சறுக்கல்தான் ஏற்பட்டது. வருகிற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும். அதிமுக-மதிமுக உறவு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது என்றார் வைகோ.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications