அதிகாரியின் 'செக்ஸ் டார்ச்சர்': பெண் தற்கொலை
நெல்லை: தான் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் மேலதிகாரி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததால் மனம் உடைந்த புதிதாக திருமணமான பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை, பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஆசிரியர் "ஏ" காலனியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பேட்டரி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த மணிமேகலை (21) என்பவருக்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்குப் பின்னர் மணிமேகலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தன் மேலதிகாரி ஒருவர், மணிமேகலையிடம் செக்ஸ் சில்மிஷத்தில் இறங்கினர்.
அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது, வீட்டுக்குப் போன பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு தேவையில்லாமல் பேசுவது என தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தனது ஆசைக்கு இணங்குமாறும் வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து வேலையிலிருந்து நின்றார் மணிமேகலை. ஆனாலும் அந்த வக்கிர புத்தி அதிகாரியின் செக்ஸ் டார்ச்சர் தீரவில்லை. தொடர்ந்து செல்போனில் பேசி தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மணிமேகலை வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட அதிகாரி மணிமேகலை தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 7 முறை செல்போனில் பேசியதைக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications