25 லட்சம் மாணவருக்கு இலவச பாஸ்-தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளி இடை நிறுத்தத்தை தடுக்கவும், மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வரவும் இந்த வசதியை அரசு வழங்கி வருகிறது.
குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீண்ட தூரம் நடந்து சென்று படிக்க வேண்டிய சிரமமான நிலையை அறிந்து இலவச பஸ் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடக்கத்தில் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல் அரசு கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்-பாஸ் வழங்கப்பட்டது.
அரசு கல்லூரி, பாலிடெக்னிக்குகளில் படிக்கும் அனைத்து மாணவ- மாணவிகள் கடந்த ஆண்டு முதல் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த கல்வி ஆண்டுக்கான இலவச பஸ்-பாஸ் வழங்கும் பணியில் அரசு போக்குவரத்து கழகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 25 லட்சம் மாணவ-மாணவி களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 2-ந்தேதி திறக்கின்றன. பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு உடனடியாக பஸ் பாஸ் வழங்க அனைத்து முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
ஜூன் முதல் வாரத்தில் இருந்து பள்ளிகளுக்கு நேரில் சென்று புகைப்படம் எடுத்து இலவச பஸ் பாஸ் வழங்க தனியாருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பம் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் வழங்கப்படும்.
அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்ப வடிவத்தை பெற்று பூர்த்தி செய்து அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மாணவ-மாணவிகளின் புகைப்படம் எடுக்கப்பட்டு பள்ளியிலேயே உடனே வழங்கப்படும்.
சென்னையில் 2 லட்சம் பேர்:
சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பணி ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியன் தெரி வித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் விரைவாக பஸ் பாஸ் கிடைக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனே விண்ணப்பத்தை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க தயாராக இருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் வெங்கடேசன் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications