'மெமோரியல் டே': லூஸில் விட்ட கூகுள்!
வாஷிங்டன்: அமெரிக்க போர் வீரர்கள் நினைவு தினத்தை கெளரவப்படுத்தத் தவறியதாக கூகுள் இணையதளம் மீது அமெரிக்கர்கள் பாய்ந்துள்ளனர்.
காதலர் தினம் போன்ற விசேஷ தினங்கள், விழாக்கள் உள்ளிட்டவற்றின்போது தங்களது லோகோவில் அதை சிறப்பிக்கும் வகையில் மாற்றம் செய்து, அந்த நிகழ்வுகளை சிறப்பிப்பது இணையதளங்களின் வழக்கம்.
கூகுள், யாஹூ உள்ளிட்ட பிரபல இணையதளங்களும் இதுபோல செய்து வருகின்றன. ஆனால் இப்போது கூகுள் நிறுவனத்துக்கு புதுச் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவில் மறைந்த போர் வீரர்களை நினைவு கூறி கெளரவப்படுத்த நினைவுதினம் (மெமோரியல் டே) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மெமோரியல் டே-வையொட்டி பல்வேறு இணையதளங்களும், அதை கெளரவப்படுத்தும் வகையில் தங்களது லோகோவை மாற்றி வடிவமைத்திருந்தன.
ஆனால் முன்னணி நிறுவனமான கூகுள் அப்படி எதுவும் செய்யவில்லை. இது அமெரிக்காவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
எது எதற்கோ லோகோவை மாற்றி கொண்டாடும் கூகுள், அமெரிக்காவுக்காக தங்களது இன்னுயிரை நீத்த மறைந்த வீரர்களைக் கெளரவப்படுத்த தனது லோகோவை மாற்றாதது ஏன் என்று பல அமெரிக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கூகுள் இப்படி கண்டுகொள்ளாமல் விட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் எம்எஸ்என். காம், பெரிய அளவில் அந்த தினத்தைப் பற்றி செய்திகள், புகைப்படங்களை வெளியிட்டு கலக்கி விட்டது.
கூகுள் ஏன் இப்படி செய்தது என்பதை எந்த 'சர்ச் என்ஜினில்' போய் தேடுவது?
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications