குஜ்ஜார்கள் முற்றுகை-டெல்லி ஸ்தம்பிப்பு
டெல்லி: ராஜஸ்தானில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினர் இன்று டெல்லியை முற்றுகையிட்டனர். ரயில் மற்றும் பஸ் மறியலில் அவர்கள் ஈடுபட்டதால் டெல்லியில் பதட்டம் நிலவுகிறது.
பழங்குடியினர் பட்டியலில் தங்களை சேர்க்க வேண்டும். தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி குஜ்ஜார் சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ராஜஸ்தான் போராட்ட களமாக மாறியுள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தானிலிருந்து தற்போது போராட்டத்தை டெல்லிக்கும் கொண்டு வந்துள்ளனர் குஜ்ஜார் சமூகத்தினர். டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதை ஏற்று ஆயிரக்கணக்கான குஜ்ஜார்கள் டெல்லியில் குவிந்துள்ளனர்.
குஜ்ஜார் போராட்டத்ைதத் தொடர்ந்து டெல்லியின் நுழைவாயில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் தண்டவாளத்தை குஜ்ஜார்கள் துண்டிக்கத் திட்டமிட்டிருந்ததால் 10க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியில் குஜ்ஜார்கள் பெரும் திரளாக மறியல் போராட்டத்தில் குதித்தனர். நொய்டா சாலை, குர்கான் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் சாலை மறியல் நடந்தது.
தெற்கு டெல்லியில் கல்வீச்சிலும் அவர்கள் இறங்கியதால் பதட்டம் அதிகரித்தது. குஜ்ஜார்கள் போராட்டம் காரணமாக நகரின் பல பகுதிகளிலும் பதட்டம் காணப்படுகிறது.
டெல்லிக்கு அருகில் உள்ள உ.பி., ஹரியாணா ஆகிய மாநிலங்களில் குஜ்ஜார் சமூகத்தினர் அதிகம் உள்ளனர். எனவே அங்கு போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லிக்குள் நுழையும் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் குஜ்ஜார்கள் முற்றுகையிட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல டெல்லியை விட்டு வாகனங்கள் வெளியே வர முடியாத நிலையும் உருவாகியுள்ளது.
ஹெலிகாப்டரில் நோட்டீஸ்:
இதற்கிடையே போராட்டத்தை கைவிட கோரி ராஜஸ்தான் அரசு நூதன பிரசாரம் செய்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலம் பேராட்டத்தை கைவிட கோரி சிவப்பு நிற நோட்டீஸ்களை வனியோகித்து வருகிறது.
ஆனால் குஜ்ஜார் இன மக்கள் அந்த நோட்டீஸ்களை கைபற்றி தீயிட்டு கொளுத்தி வருகின்றனர்.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications