அரசு நிலத்தை பட்டா போட்ட மூவர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை: சென்னை அருகே அரசு நிலத்தை பிளாட் போட்டு பலருக்கு விற்ற 3 பேரை போலீஸார் கைது செய்து அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் கோலடி, சுந்தர சோழவரம், அயனம்பாக்கம் ஆகிய ஊர்களில் கடந்த 10 வருடமாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர் பிளாட் போட்டு நிலங்களை விற்று வந்தனர். சென்னைக்கு அருகில் நிலம் கிடைக்கிறதே என்பதால் பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பிளாட் வாங்கினர்.
செல்வகணபதி நகர் என்ற பெயரில் ஒரு நகரையே உருவாக்கி விற்றனர். ஆனால் இந்த இடங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தமான இடம் என்பது தெரியவந்துள்ளது.
ராணுவ குடியிருப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும், புறம்போக்கு இடத்தையும் திருவேற்காடு ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியா என்ற சத்தியநாதன் (வயது 42), அவரது கூட்டாளிகள் செம்பரம்பாக்கம் வீரமுத்து (வயது 26), நேமம் கோபால் (வயது 50) ஆகியோர் பிளாட்களாக போட்டு விற்று வந்துள்ளனர்.
இவர்கள் ஏமாற்றி விற்பது தற்போது தெரியவந்ததால் பணம் கொடுத்து வாங்கியவர்கள் பணத்தை திரும்ப கேட்டனர். ஆனால் அடியாட்களை வைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் அவர்களை விரட்டியுள்ளனர் ரியல் எஸ்டேட் முதலைகள்.
இதையடுத்து ஏமாந்தவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கி சத்தியநாதன், வீரமுத்து, கோபால் ஆகியோரைக் கைது செய்தனர்.
அரசு இடத்தையும், ஏரி புறம் போக்கு இடத்தையும் போலி பட்டா தயார் செய்து ஒரே இடத்தை 10 பேர்களுக்கு மேல் ஏமாற்றி விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. போலி வரைபடம் தயாரித்து மனை உருவாக்கி அதை லட்சக்கணக்கில் விற்றும் வந்துள்ளனர்.
பத்திரபதிவு அலுவலகத்தில் ஒவ்வொரு இடத்துக்கும் 5 அடி, 10 அடி குறைத்து பதிவு செய்து வில்லங்கத்தில் கண்டுபிடிக்க முடியாதபடி விற்றுள்ளனர்.
மிகப் பெரிய அளவில் இந்தக் கும்பல் மோசடி செய்திருந்ததால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனுக்குப் பரிந்துரை செய்தனர். இதை ஏற்ற மாநகர ஆணையர், 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications