5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்-மேலும் பல ஐஏஎஸ்கள் இடமாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னையின் புதிய கலெக்டராக காகர்லா உஷா நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சி கூடுதல் கமிஷனர் (கல்வி), காகர்லா உஷா சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாவட்ட கலெக்டராக இருந்த ஆர்.ஜெயா, கைவினை பொருட்கள் மற்றும் ஜவுளித்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் எம்.ராஜேந்திரன், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக இணை கமிஷனர் (நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு) ரீட்டா ஹரீஷ் தாக்கர், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி கமிஷனர் எம்.ஜெயராமன், நாகப்பட்டிணம் மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

சிவில் சப்ளைஸ் இணை கமிஷனர் சகாயம், நாமக்கல் மாவட்ட கலெக்டராகியுள்ளார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.சுந்தரதேவன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பொறுப்பையும் சுந்தரதேவன் கூடுதலாக கவனிப்பார்.

தமிழ்நாடு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஸ்மிதா நாகராஜ், எரிசக்தி துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் சப்- கலெக்டர் ஆர்.பழனிச்சாமி, வணிகவரித்துறை துணை ஆணையராக (நிர்வாகம்) மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வெளிவட்டச் சாலை திட்ட மாவட்ட வருவாய் அதிகாரி (நில ஆர்ஜிதம்) டி.கே.பொன்னுசாமி, மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டிணம் மாவட்ட சீனியர் கலெக்டர் டி.எஸ்.ஜவஹர், பொதுப்பணித்துறை சிறப்பு செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் கே.சுந்தரமூர்த்தி, சிவில் சப்ளைஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+